நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: கன்னி ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

Must read

ந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

வரும் 16ந்தேதி முதல் 27ந்தேதி வரை தினசரி ஒரு ராசி வீதம் பத்திரிகை.காம் இணைய இதழில் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரமாகிறது…. 

ன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாத வர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

-வேதா கோபாலன்

கன்னி ராசி,

உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4 பாதம்

பேச்சைக் குறையுங்க. ப்ளீஸ்.  வம்பு பேச்சு வேண்டாம். குறிப்பாய் அலுவலகத்தில் யாரைப் பற்றியும் யாரிடமும் எதுவும் பேசவே பேசாதீங்க. மேலதிகாரிகளைத் தூக்கி எறியும் விதமாகவோ அலட்சியமாகவோ பேச வேண்டாங்க. கணவன் மனைவிக்குள் இப்போது ஏற்படும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் கவனமாக இருங்க. ஏனெனில் அது கிளறாமல் இருந்தால் சிம்ப்பிளாய் முடிஞ்சுடப்போகுது.  கலைத் துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாந்துட வேணாங்க.   உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாய மடைவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கப் போறீங்க.  செலவுகள் நிறைய ஏற்படும். எல்லாமே செலவுகள் இல்லைங்க. முதலீடுகள் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.

ஹஸ்தம் நட்சத்திரம்

தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அதுகூட வியப்பில்லைங்க. மூஞ்சி யைத் தூக்கி வெச்சுக்கிட்டு சண்டை போட்ட அக்கா தங்கைங்கள்ளால் வெள்ளைக்கொடி காட்டிக்கிட்டு வருவாங்க. திடீர்ப் பயணங்கள் உண்டு. அவற்றால் நன்மைங்களும் உண்டுங்க. வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு நல்ல புத்திசாலித்தனம் மற்றும் கேல்குலேஷன் காரணமாகக் குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீங்க. புதுப்புதுக் கிளைகள் தொடங்குவீங்க. நீங்க பிசினஸ் செய்பவர் என்றால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். நீங்கள் வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். பங்குச்சந்தை, இரும்பு, கட்டடம் சம்பந்தப்பட்ட தொழில் அல்லது உத்யோகத்தில் லாபமடைவீர்கள்.

சித்திரை நட்சத்திரம் 1, 2 பாதங்கள்

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். பொறாமைப்பட்டவங்க திருந்தாவிட்டாலும் வேறு இடத்தில் வேலை கிடைச்சு, டாட்டா பைபை சொல்லிட்டுக் கிளம்புவாங்க. அலுவலக சூட்சுமங்களைக் கத்துக்குவிங்க  சக ஊழியர்களிடையே மட்டுமில்லாமல் உயர் அதிகாரிங்க கிட்டயும் உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். கல்யாணமாகாமல் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு வரன்கள் தட்டித்தட்டிப் போயிக்கிட்டிருந்தது இல்லையா.. இந்த முறை கல்யாணம் கைகூடும். புதிய புதிய உத்யோக மற்றும் பயண வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீங்க. இத்தனை நாட்கள் வேலை பார்த்த இடம் மாறிப் புதிய இடத்தில் உத்தியோகம் அமையும். மாணவ மாணவியர் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீங்க. பலனும் சூப்பர்தான்.

குருப்பெயர்ச்சி பலன்களுக்கான ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

நாளை.. துலாம் ராசிக்குரிய பலன்கள்

More articles

Latest article