குருப்பெயர்ச்சி பலன்கள்2020: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

Must read

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020 அன்று ‘குரு பெயர்ச்சி‘ நிகழவிருக்கிறது.

பொதுவாக, கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது  மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. கிரகப்பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குருபகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச்  செல்லவிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள குரு பெயர்ச்சிப் பலன்கள்  ராசியின் அடிப்படையில் கோள்-சார ரீதியாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசா புத்தியைப் பொறுத்து தான் முக்கிய மற்றும் பெரும்பாலான பலன்கள் அமையும் என்பதால் அவற்றையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.

குருபகவான் எப்போதுமே தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட, பார்க்கும் பார்வைக்கு தான் அதிக நற்பலன்களை அளிப்பார்  என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு, தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 5ம் வீடு, 7 ஆம் வீடு, 9ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பது இயல்பு.

அவ்வாறாக குரு பகவானின் புனிதப் பார்வை படவிருக்கும் இடங்கள் ரிஷபம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ராசிகள் ஆகும்.

மகரம் என்பது குரு பகவானின் நீச வீடு ஆகும். எனவே பொதுவாகவே சுப பலன்கள் இந்த வருடம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. இன்னும் சிறிது காலத்தில்.. அதாவது, 2020, டிசம்பர் 27 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது நீசமான குருவுடன் ஆட்சிபெற்ற சனி அமர்ந்து நீச பங்கம் அளித்து ராஜயோகமாக்கவுள்ளார்.  ஆகவே குரு பகவானின் நீசத்தன்மை குறையும். அவர் தன்னுடைய சிறப்புப்பணியாகிய திருமணம், குழந்தைப்பேறு, சுப நிகழ்ச்சிகள், பணப்புழக்கம் ஆகியவற்றை உலக மக்களுக்கு அள்ளித்தர உள்ளார்.

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், சனி புகவான் உடன் இருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள், என்று இத்தனை காலம் குரு (தனுசு ராசியில்) ஆட்சியாக இருந்தபோது சொன்னதுபோலவே இப்போதும் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திருமணம் நல்லபடியாக முடியும். குழந்தைகளின் படிப்பு தடைப்படுவதுபோல் பயமுறுத்தி, கடைசியில் நல்லபடியாக முடியும். நிதி நிலை சரிந்து, பின் மிக நன்கு உயரும்.

உலக அளவில் சரிந்திருந்த நிதி நிலையும் வணிக வளமும் மெல்லத் தூக்கி நிறுத்தப்படும்.

நின்றுபோயிருந்த மக்களின் உழைப்பு மீண்டும் தொடரவும், அந்த உழைப்புக்கேற்ற நற்பலன்கள் அதிகரிக்கவும் மிக நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு நிகழ உள்ள குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன் பெற உள்ள ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை.

ஏனெனில் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கடக ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும், தனுசு ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கும் மீனத்துக்கு லாபஸ்தானமாகிய 11க்கும் வருவது சிறப்பாகும். அதோடு குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைத் தன் அருட்பார்வை கொண்டு பார்க்கவும் இருக்கிறார்.

அதற்காக மற்ற ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம். அவர் பார்வை படும் ராசிகள் உங்களுக்கு எந்த வீடு என்று பார்த்து அதில் மேம்பாடு கிடைக்கும் என்பதை தைரியமாக நம்பலாம்.

மேஷம், மிதுனம், சிம்மம், மகரம், கும்பம், ஆகிய ராசியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான இடத்திற்குச் செல்லாவிட்டாலும் நீசத்தன்மை பெற்றதார் அவர்களுக்கு நன்மை செய்வார்.

எனினும்.. நம் ராசிக்குச் சாதகமாக இருந்தாலும் சரி.. சுமாராக இருந்தாலும் சரி… குரு பகவானை வழிபடுதல் .. அவருக்கான பரிகாரங்கள் செய்தல் நிறைந்த வாழ்வுக்கு வகை செய்யும்.

வியாழக்கிழமை விரதம் இருத்தல், மஞ்சள் வஸ்திரம், லட்டு ஆகியவை தானம் செய்தல், குருவாயூரப்பன், ராகவேந்திரஸ்வாமி.. ஷீர்டி சய்பாபா..  மகா பெரியவர்… ஆசார்ய ஸ்வாமிகள்.. ஜீயர்.. போன்ற எந்த குருவையும் வழிபடுதல் நன்மை தரும். குரு கீதா போன்ற சுலோகங்கள்… சாயி சத்சரிதம்.. குரு சரித்ரம் போன்றவை படித்தல் அற்புத நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றுதல்.. நவகிரகத்தை 21 முறை சுற்றுதல்.. மூன்று நெய்விளக்கேற்றுதல், தங்க தானம் போன்றவை நிறைவான குருப்ரீதிகள் ஆகும்.

இவற்றைப் பின்பற்றி அனைவரும் நலம் பெறுவோம்.

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்

சித்திரை, 3,4 (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவாங்க. பயணங்களால் உற்சாகமடைவீங்க. தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். புதியவர்களால் பணவரவு உண்டு.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள்.

ஸ்டூடன்ட்ஸ் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீங்க. அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்வீங்க.

ஸ்வாதி (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

உங்களோட பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற பக்குவத்துடன் நடப்பீங்க  கணவன், மனைவிக்குள் மற்றவர்கள் ஏற்படுத்திய  குழப்பத்தைப் பெரியவர்கள் துணையுடன்  சரிசெய்வீங்க. ‘உன் சொந்தம், என் சொந்தம்’ என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவீங்க.  எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்துப் பழைய தவறுகளை மாற்றிக்கொள்வீங்க

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீங்க. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீங்க. தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

பிசினஸ் செய்யறவங்க விளம்பர யுக்திகளை கையாளுங்க. ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீங்க.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

விசாகம் 1,2,3: (துலாம்):

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களோட புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் இனி ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீங்க.

அவர் உங்கள், ராசிக்கு 810,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள். சொத்து விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீங்க.

மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கை கூடி வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க.

பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. பெற்றோர் விருப்பங்கள் நிறைவேறும்.

விசாகம்,4 (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வந்தாலும் நல்லபடியாகவே நடக்கும். இளைய சகோதரரின் வகையில் பிணக்குகள் வரும். பிறகு சமாதானமாகும். அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண் வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைத்துக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்ப வேண்டாம். ஆனால் பலகால நண்பர்களால் கட்டாயம் நன்மை நடக்கும்.

கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதங்கள் ஏற்படுவது மாறி, அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

எதிலும் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அரசு வகை விவகாரங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீங்க. பழைய பாக்கிகளை போராடி வசூலித்து நிம்மதிப்பெருமூச்ச விடுவீங்க.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று வேலையில் அமருவீங்க.

அனுஷம் (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவாங்க. ஆனால் நீங்கள்ய அனைவரையும் சரியைக எடைபோட்டு கவனமாகப் பழக ஆரம்பிப்பீங்க. உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைச் சிறிது காலத்துக்கு நிறுத்திக்கொள்வது நல்லது. இடைவெளி விட்டு பழகி, நீங்கள் ஒரு புதிர் என்ற அச்சத்தை ஏற்படுத்திவிடுவீங்க.  இதனால் நன்மை விளையும்.

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

உங்களோட ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீங்க. சுற்றுலாதலங்களுக்குச் சென்று வருவீங்க.

தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீங்க.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன அலைக்கழிப்புகள் இருந்தாலும் பெரும்பாலும் நிம்மதி உண்டு.

கேட்டை (விருச்சிகம்):

உங்களோட தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான், ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

அவர் உங்கள், ராசிக்கு 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

புது வாகனம் வாங்குவீங்க.

பெரிய திட்டங்கள் தீட்டுவீங்க. தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீங்க. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீங்க. உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீங்க. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.

தாயாரின் உடல் நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீங்க.

பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீங்க. விரும்பிய இடத்திற்று மாற்றல் சாதகமாகும்.

மாணவ, மாணவிகள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீங்க. அறிவாற்றல் கூடும். சின்னச்சின்ன தவறுகளையும் திருத்திக்கொண்டு நற்பெயர் வாங்குவீங்க.

மூலம் (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

இத்தனை காலமாக விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவாங்க. உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீங்க. பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீங்க. தங்க ஆபரணங்கள் வாங்குவீங்க.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் லோன்களை  அடைப்பீங்க.. குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்யம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். ஷேர் மார்க்கெட்டில் ஜெயிப்பீங்க. குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பதவி உயரும். சம்பளம் உயரும். அரசாங்க உதவி  தேவைப்படும் விஷயங்கள் விரைந்து முடியும்.

உங்களோட மதிப்பு, மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க அல்லது தொடர்வீங்க. கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. என்றாலும், வேலைச்சுமையும் இருந்துக்கொண்டேயிருக்கும்.

தேவையே இல்லாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீங்க. உடல்வலிவு அதிகரிக்கும். குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசு உதவி கிட்டும்.

திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழைமை வாய்ந்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் தடைப்பட்ட காரியங்கள் முடியும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் உதவுவாங்க. பெற்றோருடன்/ பெரியவர்களுடன்/ ஆசிரியர்களுடன்/ மேலதிகாரியுடன் வீண்வாக்குவாதம் செய்யவேண்டாம்.

சமயோசித புத்தியால் எதையும் சாதிப்பீங்க. மனைவிக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழிச் சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீங்க. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

உத்திராடம்,1 (தனுசு):

இதுவரையில் உங்களோட ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார். குரு பகவான் இனி உங்களோட ராசியை விட்டு விலகி, 2 – ம் வீட்டில் அமர்ந்து நீசபங்கம் பெறவிருப்பதால்  நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அவர் உங்கள், ராசிக்கு 6,8,10 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குரு உங்களோட ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் விண்ணப்பித்த லோன் கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்யம் அருமையாய் இருக்கும். பங்குச் சந்தையில் பணம் வரும். குரு 10 – ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசாங்க உதவி கிடைக்கும்.

வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீங்க. உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவாங்க. தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவாங்க. வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமான ஒருவரைச் சந்திப்பீங்க.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீங்க. இரட்டிப்பு லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீங்க. சொந்த இடத்துக்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீங்க.

வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீங்க.

சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவாங்க. சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீங்க.

உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீங்க.

– நாளை மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான பலன்கள் வெளியாகும்… 

More articles

Latest article