அரியானா:

பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள்  கைது ஹனிபிரீத் சிங் அரியான போலீசாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

வெளி மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாகவும், நேபாளத்துக்கு தப்பிவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியிருந்த நிலையில், இன்று டில்லி கோர்ட்டில் ஆஜராவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் 38 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு,   பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹனிபிரித் சிங் விசாரணைக்கு பிறகு  அரியானா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலாத்கார சாமியார் ராம்ரஹீமின் மகள் ஹனிபிரீத்,  தன்னிடம் பாரதியஜனதா டீல் பேசுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து சாமியார்  குர்மீத் ராம் ரஹீமை தப்பிக்க வைக்க அவரது வளர்ப்பு மகள் ஹனி பிரீத் முயற்சி செய்தாக குற்றம் சாட்டப்பட்டு அவரை போலீசார் தேடினார். மேலும் சாமியாருக்கு  தண்டனை விதிக்கப்பட்ட அன்று நடைபெற்ற கலவரத்துக்கு காரணம் என்றும் போலீசார் குற்றம் சாட்டினர்.

இதன் காரணமாக அவர்  தலைமறைவானார். அதைத்தொடர்ந்து, ஹனி பிரீத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து அரியானா போலீசார் தேடி வந்தனர். அவருக்கு அரியானா போலீசார் பிடிவாரண்டும் பிறப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஹனிபிரித், எனது தந்தை அப்பாவி, எனக்கும் அவருக்கும் தந்தை மகள் உறவு மட்டுமே இருந்தது என்றும்,  என்னைப் பற்றி வரும் தகவல்கள் பொய்யானவை, நான் குற்றமற்றவள் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில்  வன்முறையை தூண்டிவிட்ட புகாரில் தேடப்பட்டு வந்த குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் நேபாளத்தில தலைமறைவாக இருக்கிறார் என்றும், இன்று கோர்ட்டில் சரணடைவார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், பஞ்சாப் மாநில போலீசார் அவரை கைது செய்து அரியானா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹனிபிரித் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அரியான மாநில போலீஸ் கமிஷனர் ஏசி சாவ்லா கூறி உள்ளார்.

ஹனிபிரித்துடன் நடைபெற இருக்கும் விசாரணையில் சாமியார் குர்மீத் ராமின் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் குர்மித் ராமின் பிடித்தமான அழகி ஹனிபிரித் என்பது குறிப்பிடத்தக்கது.