ஜெயலலிதா வேடம் ஏற்ற நடிகை வீட்டில் துப்பாக்கி சூடு.. போலீஸ் பாதுகாப்பு…

Must read

றைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்கை படமாக உருவாகிறது தலைவி. இப்படத்தை ஏஎல்.விஜய் இயக்குகிறார். தமிழ். இந்தி இருமொழியிலும் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா ரனாவத்.


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி கங்கனா கருத்து சொன்னார். பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது அவர் புகார் கூறியிருந்தார். மேலும் மகாரஷ்டிரா முதல்வர் மகன் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து கங்கனா மனாலியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு துப்பாக்கி சுடு நடந்ததாக கங்கனா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் கூறும்போது,’ வெள்ளிக்கிழமை எனது வீட்டருகே மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. நான் அரசியல்வாதி குறித்து பேசியதால் உள்ளுர் குண்டர்களை வைத்து துப்பாக்கியால் என் வீட்டருகே சுட்டு என்னை மிரட்டி இருகிறார்கள். இது குறித்து போலீஸில் புகார் அளித்திருக்கிறேன், நடிகர் சுஷாந்த்தும் இப்படி மிரட்டப்பட்டிருக் கலாம்’ என்றார் கங்கனா.
கங்கனா அளித்த புகாரின் பேரில் குளு போலீசார் அவரது வீட்டை சுற்றி சோதனை நடத்தினர். தற்போது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

 

More articles

Latest article