ஐதராபாத்:
ஏப்ரல் 7ம் தேதிக்குள், தெலுங்கானா மாநிலம், கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார். அவரின் கண்டவுடன் சுடும் முடிவுக்கு உத்தரவிடும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்ற எச்சரிக்கை காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், அங்கு கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே, பாதுகாப்புடனும், எச்சரிகையுடனும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 7ம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களி டம் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், மாநிலத்தில் இதுவரை 70 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இவர்களில் 58 பேர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப் பில் இருந்து வருவதாக கூறியவர், அவர்களின் தனிமைப்படுத்தல் காலமும் ஏப்ரல் 7ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்பு, புதிதாக யாருக்கும் பாதிப்பு வரவில்லையெனில், கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும். ஊரடங்கு நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மக்கள் வெளியில் நடுமாடுவதை கடுமையாக கண்டித்த முதல்வர், மக்கள் ஊரடங்கை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும், கண்டவுடன் சுடும் முடிவுக்கு எடுக்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.