வாஷிங்டன்:

ங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறிய நிலையில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் செலவு செய்ய மாட்டோம், அவர்கள்தான் பணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களான இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி,கடந்த ஜனவரி மாதம், அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து, அங்கிருந்து வெளியேறினர்.  சுயமாக சம்பாதித்து வாழ விரும்புவதாக தெரிவித்த ஹாரி,. கனடாவில் உள்ள கொலம்பியா மாகாணத்தில் குடியேறினார்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாரி தம்பதி, அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்க ஹாரி மேகன் தம்பதி குடியேறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப, இங்கிலாந்தை  விட்டு வெளியேறிய ஹாரி மற்றும் மேகன் கனடாவில் நிரந்தரமாக வசிப்பார்கள் என்று தெரிவிக்கப் பட்டது. தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறி யுஎஸ்ல் குடியேறி உள்ளனர்.

தனக்கு  இங்கிலாந்து ராணி மற்றும்  இங்கிலாந்து நாடு சிறந்த நண்பர்கள் இருந்தாலும், ஹாரி மேகன் தம்பதிகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா பணம் செலுத்தாது. அவர்கள்தான் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.