மோரே

மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கிச்சுடு நடந்ததில் ஒரு கமாண்டோ வீரர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூரில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். பேரணியில் பெரும் வன்முறை வெடித்\து பிறகு அது கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது.

சுமார் 100க்கும் அதிகமானோர் பலியான இந்த கலவரத்தில் பல. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.  இதையொட்டி மணிப்பூ ர் மழுவத்ம் கமாண்டோ படையினர் தொடர்ந்து காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை மணிப்பூரின் மோரே பகுதியில் கமாண்டோ படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபோது   ஒரு கோவில் அருகே தூங்கிக்கொண்டிருந்த கமாண்டோ படையினர் மீது கலவரக்காரர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு மற்றும் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

கமாண்டோ படை வீரர் சோமோர்ஜித் இந்த தாக்குதலில் பலியானார். மேலும் மற்றொருவர் காயம் அடைந்தார். தாக்குதலில் இறந்த வீரர் சோமோர்ஜித் மற்றும் காயமடைந்த வீரர் விமானம் மூலம் இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கமாண்டோ படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் ஒரு மனிநேரம் இந்த துப்பாக்கிச்சூடு நீடித்தது. இந்த சம்பவத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.