அகமதாபாத்:

மோடி தலைமையிலான மத்தியஅரசின் நிர்வாக சீர்கேட்டார், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பிரபலமான வைரம் பட்டை தீட்டும் தொழில் முடங்கி உள்ளது. இதன் காரணமாக சுமார்  60ஆயிரம் வைரத்தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். பலர் தற்கொலை முடிவை நாடி வருகின்றனர்.

மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மை மற்றும் வரி காரணமாக நாடு முழுவதும் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்று வரும் வைரம் பட்டைத் தீட்டும் தொழிலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.‘

பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.  இதன் காரணமாக வைரத்தொழில்  தொழில் முடங்கி உள்ளது. இதனால், வைரத் தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

உலகின் மிகப்பெரிய வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் பாலீஷ் செய்வது போன்ற வேலைகள் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் நடைபெற்று வருகிறது.  சுமார் 15,000 பெரிய மற்றும் சிறு தொழில்கள் உள்ளன, கிட்டத்தட்ட 7ஏலட்சம் மக்கள் இந்தத் தொழிலைச் சார்ந்து உள்ளனர். 3,500க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய வைர தொழிற்சாலைகள் வசிக்கும் வைரத் தொழிலுடன் சூரத்தில் 6லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பினால், தொழில் முடங்கிய நிலையில், சுமார்  60ஆயிரம் வைரத் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் 13,000 பேர் சூரத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 2017ம் ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, பல வைரத் தொழிற்சாலைகள்  செயல்படுவதை நிறுத்திவிட்டன, அவற்றில் 40 சதவீதம் விடுமுறைக்கு பிறகும் மூடப்பட்டுவிட்டன. 2018 ஆம் ஆண்டில் சுமார் 750 வைரத் தொழில் செய்யும் பணியாளர்கள்  பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

வேலை இழப்பு காரணமாக கடநத் ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குஜராத் வைர தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  சோனி டயமண்ட் பிசினஸ் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரி கூறுகையில், பொருளாதார  மந்தநிலை காரணமாக சூரத்தில் வைரத் தொழில் முடங்கி உள்ளதாகவும், நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் ஜடின் மேத்தா ஆகியோரின் மோசடிக்குப் பிறகு, வங்கிகள் வணிகத்திற்கு கடன் கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், மோடி அரசு அமல்படுத்திய டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி போன்றவை, வைரத் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளதாகவும், பல நிறுவனங்கள் நஷ்டத்தில் துவண்டு,   மரண படுக்கையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

பல நிறுவனங்கள்,‘சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பல தொழிலாளர்கள் வேலை யிலிருந்து நீக்கப்பட்டனர். பல தொழிற்சாலைகள் தங்கள் பிரதான வாயில்களுக்கு முன்னால் “புத்திசாலித்தனமாக பணத்தைப் பயன்படுத்துங்கள், நவராத்திரிக்கு பிறகு நீண்ட விடுமுறை இருக்கலாம்” என்று அறிவிப்புகளை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக தொழிலாளர்கள் மாற்று வேலையைத் தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தொழிலாளி ஒருவர்,  வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான் சிக்கித் தவிக்கிறேன், தனக்கு இந்த வேலை மட்டுமே தெரியும் என்பதால்,  என்னால் முன்னேறவோ அல்லது திரும்பிச் செல்லவோ முடியாது என்று கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாகவே தங்களது நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது என்றும், சமீபத்தில் என் முதலாளி என்னையும் மற்ற ஆறு சகாக்களையும் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், எங்களுக்கு என்ன  செய்வதென்றே தெரிய வில்லை, எனக்கு  இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மனைவி  இருப்பதாகவும், வேறு வேலைத் தேடி அலைவதாகவும் தெரிவித்து உள்ளார்.

குஜராத்தில் அழிந்து வரும் வைரத்தொழில் காரணமாக பல தொழிலாளர்களின் உயிரும் அழிந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.