அகமதாபாத்,

குஜராத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில்  பள்ளிக்குழந்தைகள் முன் ஆபாசமாக நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போர்பந்தரில் உள்ள சாரதா வித்யாமந்திர் என்ற பள்ளியில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. இங்குள்ள தொடக்க பள்ளி ஆசிரியை ஒருவர், வகுப்பறையை மூடிக்கொண்டு மாணவர்கள் கூசும் அளவுக்கு அரைநிர்வானத்தில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சொன்னால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

வெகுநாட்களாக நடந்துவந்த இந்தச் சம்பவம் ஒரு மாணவனால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை பணி நீக்கும்படி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியை மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண்ணின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசார் அரைநிர்வாணமாக ஆபாச நடனமாடும் வீடியோக்கள் ஏராளமாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்கள். தற்போது அந்த ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.