குஜராத் முதல்வர் விஜய் ருபானி – ஹர்திக் படேல்

ராஜ்கோட்,

குஜராத்தில் பரபப்பு ஏற்படுத்திய இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, தேசிய கொடியை அவமதித்தாக போராட்ட தலைவர் ஹர்திக் பட்டேல் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அவர்மீதான வழக்கை குஜராத் அரசு வாபஸ்பெற்றுள்ளது.

குஜராத்தில் பாரதியஜனதாவின் செல்வாகு படிப்படியாக குறைந்து வருகிறது. காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாரதியஜனதா அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் தலைமை யிலான  படேல் சமுதாயத்தினர் ஆதரவை பெறும் வகையில் அவர்மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படேல் சமுதாயம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஹர்திக் படேலை போலீசார் கைது செய்ய முயன்றனர். போலீசிடம் இருந்து தப்பிக்க அவர் காரின் கூரை மீது ஏறி அமர்ந்தார். அப்போது அவரது கால் காரில் பறந்த தேசியக் கொடி மீது பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் படேல் மீது பதாரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஹர்திக் படேல் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில அரசு வாபஸ் பெற்றது.

இதுதொடர்பாக ராஜ்கோட் கலெக்டர் விக்ராந்த் பாண்டே கூறுகையில், மாநில அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில் ஹர்திக் படேல் மற்றும் பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.  போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்ற 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற நடைமுறைகள் நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டே, ஹர்திக் பட்டேல் மீதான தேசியக் கொடியை அவமதிப்பு வழக்கு உள்பட ஹர்திக் படேல் மீதான பல வழக்குகள் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹர்திக் பட்டேல் தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைக்க பாரதியஜனதா முயற்சி செய்து வருவதாகவும், குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதியஜனதா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்ற்ம் சாட்டி உள்ளனர்.

குஜராத்தில் ராகுல்காந்தி முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக அங்க காங்கிரசின்  செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஆட்சியையை பிடிக்க முடியாது என்ற பயத்தின் காரணமாகவே வழக்குகள் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்ட்டு வருகிறது.