ஆமதாபாத்,
பாரதியஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபிறகு, புதிய ரூபாய் நோட்டுக்க ளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசும் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் பெற கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறது.
இதன் காரணமாக மக்களின் பணத்தேவைகளை புரிந்துகொண்டு, அவ்வப்போது ஒரு சில கும்பல்கள் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருகிறது.
பாரதியஜனதா ஆட்சி செய்து மாநிலமான குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் இரண்டு இளைஞர்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து  ரூ. 26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் அவர்களுக்கு போலி ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.