குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

அந்த மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த வாரம் தேர்தல் நடக்கிறது.

மாநில முதல்-அமைச்சர் விஜய ரூபானி, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வதோதராவில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் மேடையில் மயங்கி விழுந்தார்.

இதனால் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வருடன் வந்திருந்த டாக்டர்கள், முதல் உதவி சிகிச்சைக்கு அளித்தனர்,

பின்னர், அவர் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டார்.. கடந்த சில நாட்களாக விஜய ரூபானிக்கு காய்ச்சல் இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்யுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

எனினும் உடல் நலத்தை பொருட்படுத்தாமல், இரண்டு நாட்களாக அவர் தீவிர பிரச்சாரம் செய்தார்.

– பா. பாரதி