குஜராத் முதல்வர் ஆனந்திபென் முந்தைய மோடி ஆட்சி குறித்து விமர்சனம்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

GUJARAT CM 1குஜராத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களின் செயலின்மையே காரணம் என்று குஜராத் முதல்வர் ஆனந்திபென் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு குஜராத்தில் உள்ல பகுதிகளில் 100- அல்லது 1200 அடி ஆழத்தில் கூட தண்ணீர் கிடைப்பது இல்லை.
நிலத்தடி நீர் முபெல்லாம் 10 அடியில் கிடைத்து வந்தது. அது 50,100, 200 அடியாக உயர்ந்து தற்பொழுது 1000 அடியாக உயர்ந்துள்ளது.
இந்தப் பிரச்சனை குறித்து முந்தைய ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லையென்று ஆனந்தி பென் குற்றம் சாட்டினார்.
முந்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி இருக்க வேண்டும். புதிய வழிகளில் தண்ணீரை சேமிக்கவும் அது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் முந்தைய அரசாங்கங்கள் தவறிவிட்டன என்றும் கூறினார்.
அவருக்கு முன்பாக 1995 முதல் குஜராத்தில் நரேந்திர மோடி  ஆட்சி செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை நீர் ஆதாரங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
இதுவரை குஜராத் அரசு 1115 கிராமங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது. அரசுக் கணக்கின் படி, 203 அணைகளிலும் மொத்த கொள்ளளவில் 20% தண்ணீர் மீதம் உள்ளன.

More articles

Latest article