அகமதாபாத்,

குஜராத் சட்டசபை தோ்தலில் பாஜக-வுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளது தோழமை கட்சியான சிவசேனா. இதன் காரணமாக இரு கட்சிகளிடையே சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள், பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால், பாஜவின் தோழமை கட்சியான சிவசேனா எதிர்த்து தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே மோடி அலை மங்கி வருவதாக சிவசேனை எம்பி கருத்து தெரிவித்திருந்த நிலையில், புல்லட் ரெயில் குறித்து மோடியின் ஏமாற்றுவேலை என்று கூறியிருந்ததது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலின்போது கூட்டணியை விட்டு விலகி தனித்து நின்று போட்டியிட்டது.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

குஜராத் சட்டசபைத் தோ்தல் வரும் டிசம்பா் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக-வை எதிர்த்து 25 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக வும், போட்டியிடாத தொகுதிகளில் ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவிற்கு வெளியே சிவசேனாவை பலப்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.