‘நவரசா’. ஒன்பது இயக்குநர்கள் இயக்கத்தில் 9 ஆந்தாலஜி கதைகள். இந்த ‘நவரசா’வில் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் காதல் ரசமான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கதை.

எந்த வேலையும் இல்லாமல் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒரு கேப்பசினோவையே நாலு மணி நேரம் குடிக்கும் எலீட் காதலர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.

சூர்யா-ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் ரொமான்ஸ் பார்க்கும் நமக்கோ ரொமான்ஸ் நரம்புகள் கிட்டார் கம்பிபோல ஒவ்வொன்றாக அறுபடுகிறது.

ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் கெளதம் மேனன் படங்களில் வரும் அதே டிப்பிக்கல் ஹீரோயினாக கண்களாலேயே பேசுகிறார், சிரிக்கிறார், குழைகிறார். ஆனால், ஸ்கிரீனில் சூர்யா, ப்ரயாகா என இரண்டு நடிகர்கள் இருப்பது தெரியாமல் கெளதம் மேனேனே மாறி மாறி நடித்துக்கொண்டு இருப்பதுபோன்ற உணர்வுதான் வருகிறது.

இந்த சீரிஸ்ஸை எடுத்ததற்காக கௌதம் மேனனை கழுவி ஊற்றி இருக்கிறார் இளம் இயக்குனர் லீனா மணிமேகலை.

https://www.facebook.com/gregor.mendel.560/posts/914613389268955

இந்நிலையில் பாராவின் இறவான் நாவலும் கெளதமின் கித்தார் கம்பி மேலே நின்று படமும் ஒன்று தான் என்று சமூகவலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கதைகளில் உள்ள ஒற்றுமையையும் அணு அணுவாக விவரித்து வருகின்றனர்.

https://www.facebook.com/AuthorPara/posts/3031544100506518

நாவலையும் படித்து, அந்தப் படத்தையும் பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டு உங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன் என பாராவும் தெரிவித்துள்ளார்.