உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டி-லா-பியூன்ட் நேற்று காலமானார்.

ஸ்பெயின் நாட்டில் 1909 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ம் தேதி பிறந்த பியூன்ட் உலகின் அதிக வயதான நபராக செப்டெம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு 112 வயது 211 நாட்கள் பூர்த்தியாகி இருந்தது, இந்நிலையில் 112 வயது 341 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவர் காலமானார்.

இன்னும் மூன்று வாரங்களில் தனது 113 வயதை கொண்டாட காத்திருந்த நிலையில் மரணமடைந்தது ஸ்பெயின் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.