கின்னஸ் சாதனை: குஜராத்தில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு!

Must read

அகமதாபாத்:
வராத்திரி விழாவையொட்டி  குஜராத்தில் இந்த வருடம் ஏற்றப்பட்ட மனிதநேய விளக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
human-1
நேற்று நடைபெற்ற  விழாவில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி . 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில்  ஏற்றி வைத்தார்.
ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் சுமார் ஓராண்டு காலமாக உருவாக்கம் செய்யப்பட்ட  இந்த விளக்கின் அடிப்பாகம் 15.8 அடி விட்டம் கொண்டதாகும்.
இந்த விளக்கு  உலகின் மிகப்பெரிய விளக்கு என்று கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
நேற்றுமாலை நடைபெற்ற நவராத்திரி தொடக்கவிழாவில் குஜராத் மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற கர்பா மற்றும் டான்டியா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய உணவு வகைகளுடன் கூடிய  25 சிறப்பு உணவகங்களும் இங்கு திறக்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதிவரை நடைபெறும் நவராத்திரி விழாவில் 3 லட்சம் வெளிநாட்டினர் உள்பட சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக குஜராத் மாநிலத்தில் வரும் 7 முதல் 22 தேதிவரை உலக கபடிப்போட்டியும் நடைபெறுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article