டில்லி
ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதால் இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 61 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையொட்டி அரசு சென்னை உள்ளிட்ட 6 சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அந்த நெறிமுறைகளில், “உலக அளவில் ஒமிக்ரான் தொற்று தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. இங்கிருந்து இந்தியா வரும் பயணிகள் முன்கூட்டியே ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். 20 ஆம் தேதி முதல் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பயணிகள் விமான போக்குவரத்து இயக்குநரகம் இதைக் கண்காணிக்க விமான போக்குவரத்து நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு விமான நிலையத்திலேயே பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் பொறுப்பு உள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.