சென்னை,

டையை மீறி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை  விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு,  ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,   பான் மசாலா, குட்கா 40கோடி லஞ்ச விவகாரத்தில், சிபிஐ விசாரணை அவசியம் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி விடுத்துள்ளது.

டை செய்யப்பட்ட பான் மாலா,  :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக,  விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டின் முதல்பெஞ்சில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய விசாணையின்போது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த   விவகாரத்தில் அரசின் ஒவ்வொரு துறை சார்பிலும் ஒரு அரசு வழக்கறிஞர் தனித்தனியாக  ஆஜராவது ஏன்? என்றும், இந்த  விவகாரத்தில் ஏதோ ஒரு தீவிரத்தன்மை அல்லது பிரச்சனை இருப்பதாக கருதுகிறோம்  என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

குட்கா வழக்கை விசாரிக்க முதலில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஜெயக்கொடி ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு வேறு துறைக்கு மாற்றி, அவருக்கு பதிலாக  மோகன் பியாரேவை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வரும் 29ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.