சென்னை:

குட்கா,பான் மாசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

குட்கா பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து கடந்த 2013ம் ஆண்டு மே மாதம்  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்டார். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இருந்தாலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன்  குட்கோ, பான் மசாபா போன்ற போதை பொருட்கள் ரகசியமாக  விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்யப்பட்ட வந்தன. இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா விற்பனையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட பல குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. இதற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,  குட்கா பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.