டில்லி:

லகிலேயே அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

உலக வங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தன்னுடைய ஆண்டறிக்கையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைப் பற்றி குறிப்பிடுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தற்போது உலக நாடுகளில் 115 நாடுகள் ஜிஎஸ்டி விரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் 49 நாடுகள் ஒற்றை வரிவிதிப்பு முறையை கையாண்டுவருகின்றன. 28 நாடுகள் இரட்டை வரி கட்டமைப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, லக்க்ஷம்பர்க் மற்றும் கானா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் பூஜ்யம் இல்லா (nil rate)வரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த நாடுகளில் மட்டுமே நான்கு முதல் ஐந்து விதிமான வரிகட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கட்டமைப்பில் எந்தவிதமான சிக்கல்களும்  இல்லை.

இந்தியாவில்தான் உட்சபட்ச வரி விதியும் (28%), அதிக பட்ச வரிவிதிப்பு கட்டமைப்பும் (0, 5%, 12%, 18% & 28%) செயல்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் அரசு தரப்பில் சில நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அதுவும் தமிழ்நாட்டில் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன், பொழுதுபோக்கு வரியையும் செலுத்தவேண்டி இருந்தது.

இந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால், உலகில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பை அமல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது” – இவ்வாறு உலக வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.