டில்லி
ஜிஎஸ்டி வருவாய் மேலும் 18% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே அறிவித்துள்ளார்.
தற்போதைய நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வந்த போதிலும் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. சராசரி ஜிஎஸ்டி மாத வசூல் தற்போது ரூ.97,000 கோடியாக உள்ளது. வரும் மார்ச் மாதம் வரை மேலும் ரூ.6.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கலாம் என அரசு மதிப்பீடு செய்துள்ளது.
மத்திய வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே, “சென்ற நிதியாண்டில் ஜிஎஸ்டியின் சராசரி மாத வருமானம் ரூ. 89000 கோடியாக இருந்தது. ஆனால் தற்போதைய நிதி ஆண்டில் இந்த சராசரி ஜிஎஸ்டி மாத வருமானம் ரூ.97000 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த நவம்பர் மாதம் முதலான 3 மாதங்களில் மட்டும் சென்ற ஆண்டு வருமானத்தை ஒப்பிடும் போது இந்த வருட வருமான 14% வளர்ச்சி அடைந்துள்ளது. இதே விகிதத்தில் வரும் ஆண்டில் ஜிஎஸ்டி வ்ருவாய் மேலும் மேலும் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு 18% வரை செல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்த்ள்ளார்.