டெல்லி:

ஜிஎஸ்டி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக மானிய விலை சமையல் சிலிண்டர் விலை ரூ. 32 உயர் ந்துள்ளது. இதன் மூலம் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.446.65ல் இருந்து ரூ.477.46 என்று உயர்ந்துள்ளது.


முந்தைய மறைமுக வரி முறையில் தொழிற்சாலை வாயில் வரி மற்றும் விற்பனை வரி எல்பிஜி சிலிண்டர்களுக்கு நாடு முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

வாட் அல்லது விற்பனை வரி டெல்லி, சண்டிகர், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், தமிழ்நாடு, உ.பி. மேற்கு வங்கம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் விதிக்கப்படவில்லை. இதர மாநிலங்களில் 1 முதல் 5 சதவீதம் வரை விதிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி மூலம் மானிய விலை எல்பிஜி சிலிண்டர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட் அமல்படுத்தாத மாநிலங்களில் சிலிண்டர் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. எண்ணைய் நிறுவனங்களில் தகவல்களின் படி டெல்லியை தவிர மேற்க வங்கத்தில் ரூ.31.67 அதிகரித்து ரூ. 480.32 என உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ. 31.41 உயர்ந்து ரூ. 465.56 என உயர்ந்துள்ளது.

3 சதவீதம் வாட் விதிக்கப்பட்ட மும்பையில் ரூ. 14.28 அதிகரிக்கப்பட்டு ரூ.491.25 என உயர்ந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சர்வதேச அளவிலான எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஒரு சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் அதிகளவில் மானிய சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டர் 12 வழங்கப்ப டுகிறது. இதன் பிறகு சிலிண்டர் தேவைப்பட்டால் சந்தை விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சந்தை விலையில் இந்த சிலிண்டர் விலை ரூ. 564 ஆகும்.

5 சதவீத ஜி.எஸ்.டி காரணமாக டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூ. 26.88 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மானியத்தில் ரூ. 2 ரத்து செய்யப்பட்டதால் மேலும், ரூ. 3 அதிகரித்துள்ளது. சந்தை விலை சிலிண்டர்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 564க்கு விற்பனை செய்யப்படுகிறது.