சென்னை

ஜி எஸ் டி குறைந்த பின் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது.

உணவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி எஸ் டி நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்தது.   உணவு விடுதியில் உணவு அருந்துவோர் பலரும் இதனால் விலை குறைந்து செலவும் குறையும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  ஆனால் உண்மையில் இதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.

ஜி எஸ் டி எவ்வளவு குறைந்ததோ அதற்கேற்ப உணவுப் பொருட்களின் விலையை உணவு விடுதி உரிமையாளர்கள் ஏற்றி உள்ளனர்.  பல இடங்களில் முந்தைய பில்லும் தற்போதைய பில்லும் ஒரே தொகையில் உள்ளதை பலரும் இணைய தளங்களில் பதிந்தனர்.  இதற்கு மேலாக பெரிய உணவகம் ஒன்றில் விலை உயர்வால் முன்பு செலுத்தியதை விட அதிகம் தொகை செலுத்த வேண்டி உள்ளதாகவும் சிலர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள். “ஜி எஸ் டி குறைப்பினால் வரும் பலன் வாடிக்கையாளர்களுக்கு போய் சேரக்க் கூடாது என்பதில் உணவு விடுதி உரிமையாளர்கள் கவனமாக உள்ளனர்” என கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.   ஆனால் உணவு விடுதி உரிமையாளர்கள் உள்ளீட்டு வரி (input tax credit) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் விலை உயர்த்தப் பட்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் பாதிப்பை உணர்ந்ததால் தான் முன்பு அளித்த அதே தொகையை அளிக்கும் படி விலை உயர்த்தி உள்ளதாக கூறுகின்றனர்.