ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை

Must read

புதுடெல்லி:
ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் உள்ளன. தங்கத்துக்கு மட்டும் ஸ்பெஷலாக 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு மீத பொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்தை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது.

More articles

Latest article