டில்லி:

ஜிஎஸ்டி காரணமாக கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் தீபாவளி பரிசு பொருட்களில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு கார்பரேட் நிறுவனங்கள் தங்களது இணை நிறுவனங்கள், நெட்ஒர்க் பங்குதாரர்கள், ஊழியர்கள், முக்கிய நபர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பரிசுகள் வழங்குவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு இதில் 35 முதல் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது என்று இந்திய சேம்பர் ஆப் காமர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது. கார்பரேட் நிறுவனங்களின் கணக்கு பராமரிப்பில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக பரிசு வழங்குவது குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் போனஸ் வழங்குவதிலும் சில கார்பரேட் நிறுவனங்கள் குறைப்பு நடவடிக்கையை கடைபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்த உணர்வு பூர்வமான நிகழ்வை பாதிக்க செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அச்சங்க பொதுச் செயலாளர் ராவத் கூறுகையில், ‘‘வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், நுண்ணலை அடுப்பு, மின் அடுப்பு போன்ற நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவையின் விழாக்கால விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. மக்களுக்கு தீபாவளி பட்ஜெட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வர்த்தகம் பாதித்துள்ளது’’ என்றார்.

இது தொடர்பாக இச்சங்கம் 758 நிறுவனங்களுடன் தொலைபேசி மூலம் ஆய்வு நடத்தியுள்ளது. முதல், 2, 3ம் நிலை நகரங்கான அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டில்லி, ஐதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, ல க்னோ, மும்பை ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.