டெல்லி: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவில் ரூ.1,30,127கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் 1ந்தேதி அன்று கடந்த மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 1லட்சத்து 30ஆயிரத்து 127கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது என்றும், இரண்டாவது பெரிய தொகை என்று தெரிவித்து உள்ளதுடன். கடந்த 2020ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 24 விழுக்காடு அதிகம் என்றும் கூறியுள்ளது.
ஏற்கனவே 2021 ஏப்ரல் மாதத்தில் 1லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாயாகப் பெறப் பட்டருந்த நிலையில், தற்போது 2வது அதிகபட்ச வருவாயை அக்டோபர் மாதம் பெற்றுள்ளது.