சென்னை:
ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா தமிழக அரசு நியமித்துள்ளது.
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel