உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000 பேர் இந்த நாட்டில் பயின்று வருகின்றனர்.

போர் காரணமாக இந்திய மாணவர்களின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. மேலும் மாணவர்களை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லிவிவ் நகரில் உள்ள டாய்ன்லோ ஹாலிட்ஷ்கி மருத்துவ பல்கலைக் கழகத்தில் படிக்கும் 40 மாணவர்களை உக்ரைன் போலந்து எல்லைக்கு அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் பல்கலைக்கழக பேருந்தில் அழைத்துச் சென்று விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அங்கிருந்து சாலை மார்கமாக போலந்து நோக்கி நடந்து செல்வதாக கூறப்படுகிறது. அங்கிருந்து இவர்களை இந்தியா அழைத்து வருவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மீது தடை பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த புடின்