சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான, “குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நடத்தப்பட்டு, பணி நிரவல் நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட அரசில் உள்ள சிறு பணிகள் பணிகள் உள்பட வகையான பணிகளுக்கும், அதற்கு உரிய குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் தேர்ச்சிகள் மற்றும் நேர்காணல் மூலம் நியமிக்கடப்பட்டு வருகிறது.
சமீபத்தில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாது. இதையடுத்து, தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, துணை கலெக்டர் 16 இடம், போலீஸ் டிஎஸ்பி- 23, வணிகவரித் துறை உதவி ஆணையர்- 14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் உள் பட மெலாத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்படஉ ள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிரபாகர்.. குருப்-1 தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என தெரிவித்தவர், தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் குறிப்பிடப்படும் என்றவர், காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் இனி வரும் தேர்வுகளின்போது, தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.