சென்னை :

2006ம் ஆண்டு குரூப்-1 விடைத்தாள் வெளியான விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியின் பிரிவு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலர் காசி ராம்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. செக்‌ஷன் ஆஃபிசர் காசி ராம்குமார் துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட குரூப்-1 பதவி தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது காசி ராம்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது.  அப்போது,  குரூப் 1ன் தேர்வு விடைத்தாள் வெளியானது. இந்த  குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டில்,சென்னை  தி.நகரில் செயல்பட்டு வரும் அப்பல்லோ ஸ்டடி சென்டரும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.