சென்னை: குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் பிப்ரவரிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே குரூப்1, குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வில் 3 தாள்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேர தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்த தேர்வில் தேர்வாளர்களுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதனால், தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு, தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய TNPSC தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர் அஜய் யாதவ், குரூப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், குரூப் 2, 2ஏ தேர்வில் 5,777 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு முடிவுகள் ஜன. 12-ல் வெளியிடப்படும் என கூறியவர், குரூப்1-ல் 95 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.