டில்லி:
தமிழகத்தில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், நிலத்தடி நீர் குறித்து தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1139 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் உள்ள 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது என்றும், 105 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளது மேலும், 35 இடங்களில் நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமை யாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது என்றும் கூறி உள்ளது.
இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.