டாம் ஹாங்ஸ் நடித்துள்ள ‘க்ரேஹவுண்ட்’ திரைப்படம் ஜூலை 10 அன்று ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘க்ரேஹவுண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும்படி திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை ஆப்பிள் டிவி+ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி ஆப்பிள் டிவி+ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ஜூலை 10 அன்று வெளியாகும் என்று சோனி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.