சென்னை: பெரியார் ஈ.வெ.ரா. சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை கறுப்பு மை கொண்டு அழித்த நெடுஞ்சாலைத்துறை, தற்போது மீண்டும் நள்ளிரவில் பழைய பெயரையே எழுதி உள்ளது.
சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை , (Grand Western Trunk Road) கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என தமிழக நெடுஞ்சாலை துறை சமீபத்தில் மாற்றி பெயர் பலகை வைத்தது. அத்துடன் இதே பெயரை தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பதிவிட்டுள்ளது இதற்கு திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனால், அதை நெடுஞ்சாலைத்துறை மறைத்து, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயர் பலகை வைத்தது. இதையடுத்து, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கறுப்பு மை கொண்டு அழித்தனர்.
இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரில் பூசப்பட்ட கருப்பு மை மீது மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என ஸ்டிக்கர் ஒட்டப்பபட்டு உள்ளது. இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் மீண்டும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையானது.
திமுக, திகவின் கடும் எதிர்ப்புக்கு நெடுஞ்சாலைத்துறை பணிந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.