சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காந்தி பிறந்த தினம்,  ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் உள்பட முக்கிய நாட்களில்   கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம்  கொண்டாடப்பட வேண்டும் என்றும்,  ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என  சட்டப்பேரவையில் 110 விதியில்  கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இநத நிலையில், தமிழகஅரசு, வரும் நவம்பர் 1ந்தேதி மாநிலம் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.  தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, கண்காட்சி நடத்துதல், ஊழியர்களை அங்கீகரித்தல், கலந்துரையாடல்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…