டில்லி,
ரெயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயக்கப்படும் அதிவேக ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்தை சென்றடைவதோ, வருவதோ கிடையாது. இதன் காரணமாக சிலசமயம் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிது.
இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் ரெயில்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த முயற்சி செய்து வருவதாகவும், அடுத்த ஆண்டுமுதல் இது படிபடிப்யாக அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி அந்த கருவி ரெயிலின் என்ஜினில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவியுடன் ரியல் -டைம் பங்சுவலிட்டி மானிட்டரிங் அண்ட் அனலைசிஸ் என்ற கருவியும் பொருத்தப்படும் என்றும், இதன்மூலம், ரெயில் வருகின்ற நேரம் துல்லியமாக பயணிகளுக்கு தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இந்த கருவி சோதனைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு முதல் டெல்லி-கவுரா மற்றும் டெல்லி-மும்பை வழிதடங்களில் செல்லும் ரெயில்களில் நடைமுறை படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.