நவீன் குமார் –
கவுரி லங்கேஷ்

 

பெங்களூரு:

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி கே டி நவீன் குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

கர்நாடகாவில் ”பத்திரிக்கா” என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் விமர்சித்து  கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் விசாரணை செய்யும் அதிகாரியிடம் மட்டுமே குற்றத்தை ஒப்புக் கொண்டார், அவர் நீதிபதி முன்னிலையிலும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டது.

கே டி நவீன் குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.  இந்த உண்மை கண்டறியும் சோதனையில் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலையில் பிரவீன் என்ற தன்னுடைய கூட்டாளிக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.