ஞ்சாவூர்

பிரச்சினைக்குரிய தனியார்ப் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கருத்துரை வழங்கினார்.  பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”சென்னை நகரில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  இது குறித்துக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. காவல்துறையினரால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.   அந்த பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.  மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பதினோராம் வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை ஆகும். ஆனால்  பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.   விரைவில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் குறித்து மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசிடம் கேட்டுள்ளது” என்று தெரிவித்தார்.