சென்னை:
ழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால் அந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டது.

இது விவசாயிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் மூலம், எதிர்காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய முறைப்படியே வழங்கப்படும்” எனக்கூறி முடித்துக்கொண்டார். மீட்டர் பொருத்தப்படாமல் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

[youtube-feed feed=1]