டில்லி

வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க இந்திய அரசு தனது மூன்றாவது சுற்றில் மேலும் 23 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி அளித்துள்ளது.

இந்திய அரசு ஒ என் ஜி சி நிறுவனத்தின் சார்பில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க நேரடி சர்வதேச உரிமக் கொள்கையின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது.  இவ்வாறு ஏற்கனவே இரண்டு சுற்றுக்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட முதல் சுற்றில் 60000 சதுர கிமீ பரப்பளவில் 55 கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.    இரண்டாவது சுற்றில் 30000 சதுர கிமீ பரப்பளவில் 14 கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது

இன்று மூன்றாவது சுற்றில் 23 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்க இந்திய அரசு சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரி உள்ளது.   இந்த 23 ல் 5 கிணறுகள் நிலக்கரி அடிப்படையிலான மீதேன் கிணறுகளாக அமைய உள்ளது.    இதற்காக 31000 சதுர கிமீ நிலம் அளிக்கப்பட உள்ளது.

இந்த மூன்றவது சுறின் மூலம் இந்தியாவுக்கு சுமார் 60-70 கோடி டாலர் அன்னிய முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.    இந்த ஒப்பந்தப் புள்ளிகள் அளிப்பதற்கு வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைப்பதன் மூலம் அன்னிய முதலீடுகள் அதிகரிப்பது மட்டுமின்றி நாட்டின் எரிபொருள் தேவையையும், இந்த உற்பத்தி கவனித்துக் கொள்ளும் எனவும் இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் குறையும் எனவும் பெட்ரோலியத் துறைஒ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.