டெல்லி: இறைச்சிகளுக்கான கையேட்டில் இருந்து ‘ஹலால்’ என்ற சொல்லை மத்தியஅரசு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இறைச்சியை இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்பவே, விலங்குகள் பலியிடப்படுகின்றன. இந்த நிலையில், அதை குறைக்கும் வகையில், ஹலால் என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ” ஹலால் முறை காரணமாக குழப்பம் ஏற்படுவதால், புதிய இறைச்சி கையேட்டிலிருந்து ஹலால் என்னும் சொல் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மத்தியஅரசின் இநத் நடவடிக்கைக்கு வலதுசாரி அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் பன்சல் கூறுகையில், “ஹலால் சான்றிதழ் முறையில் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், பட்டியலின மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இறைச்சி சந்தையில் இஸ்லாமிய மேலாதிக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்ஹலால் சொல் பயன்பட்டு வந்த நிலையில், மத்தியஅரசு, அந்த சொல்லை நீக்கி உளளது. இது இஸ்லாமியர்கள் விலங்குகளை இறைச்சிக்காக படுகொலை செய்வதில் இருந்து மீட்கும் செயல் என்று கூறப்படுகிறது.