புதுடெல்லி: 
புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதைப் போக்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.