டெல்லி:

நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டமான தொழிலாளர் சேம நல நிதி தற்போது ரூ. 8.5 ட்ரில்லியன் ( 127 பில்லியன் டாலர்) நிதியை கையாண்டு வருகிறது. 40 மில்லியன் பேருக்கு இதில் 8 சதவீதத்தை திருப்பி கொடுத்து வருகிறது.


இந்த நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. பங்குகளை வாங்க 5 சதவீதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலீடு தற்போது 10 சதவீதமாக உள்ளது.

‘‘இதை 15 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தரேயா தெரிவித்துள்ளார்.

அடுத்து நடக்கும் மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் இதற்கு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.