புதுடெல்லி:
நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகல்வித்துறை,திரையரங்குகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.பின்பு திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது.இந்நிலையில் நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.