சென்னை

வெள்ள நிவாரண நிதி வழங்கல் தொடர்பாகத் தமிழக அரசு ஒரு அரசாணி வெளியிட்டுள்ளது.

மிக்ஜம் புய்ள் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவடங்களில் கன மழை  மற்றும் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி கடந்த வாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இன்று இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

 * சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊற்றுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6000 வழங்கப்படும்.

*புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து பொருட்களை இழந்தவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிதி வழங்கப்படும்.

*அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

*விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

*தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும்.

*நியாய தலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உரிய எற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

*நிவாரணத் தொகை ரூ.6, 000 வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

எனக் கூறப்பட்டுள்ளது.