கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தை மாலாக மாற்ற இருப்பதாகவும் அந்த இடத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் வரவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.
இது தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறைச் செயலாளர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். அதிகாரியை தொடர்பு கொண்ட இந்த குழுவிடம் “லுலு மால் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
‘கோயம்பேட்டில் லுலு மால்’ என்பது முற்றிலும் வதந்தி!
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS @tnpoliceoffl pic.twitter.com/Iy0xloCQnS
— TN Fact Check (@tn_factcheck) January 29, 2024
இதனால் சமூக ஊடகங்களில் கூறப்படுவது போல் அங்கு ‘லுலு மால்’ வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது.