பரேலி:

உ.பி. மாநிலம் பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடும், பணி நேரத்தில் பான்பராக், குட்கா, வெற்றிலை போன்றவற்றை சுவைக்க கலெக்டர் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதோடு வேலை நேரத்தில் வாகன நிறுத்துமிடங்களை கலெக்டர் சுரேந்திர சிங் பூட்டி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பணி நேரத்தில் ஊழியர்கள் வெளியில் செல்ல முடியாது.

இந்நிலையில் கலெக்டர் முன் அறிவிப்பின்றி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலம் கையகப்படுத்தும் பிரிவில் எழுத்தராக பணியாற்றும் குரேஷி என்பவர் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பணியில் ஈ டுபட்டிருந்தார். அதோடு வாயில் வெற்றிலை மற்றும் பான் சுவைத்து கொண்டிருந்தார். இதை கண்ட கலெ க்டர் அந்த ஊழியருக்கு ரூ. 500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதோடு அந்த ஊழியரை கலெக்டர் எ ச்சரித்து சென்றார்.

கலெக்டர் சுரேந்திரசிங் கூறுகையில் ‘‘மாநில அரசு இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ஒரு ஊழியருக்கு அபராதம் விதி க்கப்பட்டுள்ளது. இதில் எள்ளளவும் சமரசத்திற்கு இடமில்லை. ஒழுங்கீன ஊழியர்கள் மீது நடவடிக்கை எ டுக்கப்படும்’’ என்றார்.

மாநில அரசின் வழிகாட்டுதல் படி அரசு ஊழியர்கள் நாகரீகமான ஆடைகளை அணிய வேண்டும். பணி செய்யும் இடத்தில் புகைபிடித்தல், குட்கா அல்லது பான் சுவைத்தல் கூடாது. கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 174 ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை மூலம் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறது.