சென்னை:
ளுநர் விவகாரம்: சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா பற்றி பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள் ஆளுநர் பதவிக்கு ஏற்புடையது அல்ல என்றும், ஆளுநரின் செயல்பாடுகள் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசு தலைவரும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் முன் மொழிய உள்ளார்.