சென்னை: கடந்த ஆண்டு பேரவையில்  தேசிய கீதம் பாடும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில்  வணக்கம் தெரிவித்து  தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை முடித்தார். தமிழ்நாடு அரசின் உரை அரசியல் சாசனத்துக்கு எதிராக இருப்பதாக கூறியதுடன், தேசிய கீதம் தொடர்பான தனது கோரிக்கை ஏற்கபடவில்லை என்று கூறி, உரை புறக்கணித்து விட்டு அமர்ந்தார். இதையடுத்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்ய எழுந்து பேசத் தொடங்கினார். இதையறிந்த ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பேசிய சபாநாயகர்,  இனிதான் தேசிய கீதம் பாடுவோம் என்று கூறினார். ஆனால், ஆளுநர் அதை பொருட்படுத்தாமல் புறப்பட்டு சென்றார். அப்போது  துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம் குறித்து  சபாநாயகர் ஒரு மனதாக நிறைவேறியதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், * அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என்றும் கூறியதுடன்,  கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது, அவை நீக்கப்படும் என்றார்.

இதுகுறித்து ருத்து தெரிவித்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், கடந்த ஆண்டு பேரவையில்  தேசிய கீதம் பாடும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியதுடன்,   ஆளுநர் உரை என்பது ஆளுநரின் கொள்கைகளை சொல்வதல்ல, அரசின் கொள்கைகளை சொல்வது என்பதை ஆளுநர் ரவி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.